Sunday, 14 November 2021

காலண்டர் நகைச்சுவை

 நானும் புதுப்பொண்டாட்டி ஆச்சேன்னு, பொறுமையா போனா... ஓவரா அடாவடி பண்ணிட்டு திரியுறாண்ணா...

புதுசில்ல, அப்டிதா இருக்கும். வீட்ல மாசக் காலண்டர் இருக்கா ?

இருக்குண்ணே...

அந்தக் காலண்டர்ல, இன்னைலிருந்து ஒரு ஆறுமாசம் தள்ளி ஒரு தேதில கோடு போட்டு வெச்சுட்டு, பொறுமையா இரு...

ஆறுமாசத்துல மாறலேன்னா ?

இன்னுமொரு ஆறுமாசம் தள்ளி கோடுபோடு...

அப்பவும் மாறலேன்னா ?

இதென்னடா கேள்வி ? உடனே அந்த ராசியில்லாத காலண்டர கழட்டி வீசிட்டு, வேற கடையோட காலண்டர வாங்கிமாட்டு. இப்டியே வருசத்துல ரெண்டுவாட்டி பொறுமையா கோடுபோட்டு கொண்டு போனா... ஈஸியா டைம் பாஸாகும். ஒரேயடியா அம்பதறுவது வருஷத்துக்கு கோடு போடணும்னா... ரொம்ப கஷ்டமாத்தா இருக்கும். போய் சூதானமா பொழைச்சுக்க. போ...

ச்சை, என்னோட பொழப்பு இப்டி ஆயிப்போச்சுணே. உங்க வீட்ல பாருங்க, அந்தக்கா எவ்ளோ தன்மையா நடந்துக்கறாங்க...

ஒரு ரூமுக்கு ரெண்டு காலண்டர் மாட்டி வெச்சிருக்கண்டா. !!! 😞😞😞

No comments:

Post a Comment