Tuesday 30 November 2021

என்னை கல்யாணம் பண்ணி எப்படி என்னை காப்பாற்றுவாய் !!

 என்னை கல்யாணம் பண்ணி எப்படி என்னை காப்பாற்றுவாய் !!



கவலை பாடாதே எதற்கும் இருக்கட்டும் என்று 10 தக்காளி செடி வீட்டில் நட்டு வைத்து இருந்தேன். இப்ப செடி நல்லா வளர்ந்து காய்ச்சி இருக்கு!


அது போதும்! நம்ம ஒரே பாட்டில் பணக்காரனாக ஆகி விடலாம்!!

Saturday 20 November 2021

வெளக்கு ஏத்திட்டியா..?

 நேற்று சாயந்திரம் 6 மணி...

பிரண்டுகிட்ட இருந்து போன்...

" ஹாய் ..!! "

" ஹாய்.. சொல்லு மச்சி.."

" என்ன .. வெளக்கு ஏத்திட்டியா..? "

" நான் பல பேரு வாழ்க்கையில விளக்கு ஏத்தி இருக்கேன்.. நீ யாரை கேக்கறே..??! "

போனை வெச்சிட்டான்..!!

ரொம்ப பொறாமை புடிச்சவனா இருப்பான் போலருக்கு..!!

எனக்கு தினம் ஒரே ஒரு குழப்பம் தான் !

 எனக்கு தினம் ஒரே ஒரு குழப்பம் தான் !


தூக்கம் வரலை என்று போனை நோண்டிட்டு இருக்கிறேனா! அல்லது



போனை உபயோகம் படுத்துவதால் தூக்கம் வரலையா!

ஒரே குழப்பமாக இருக்கு! தினம்!!


Sunday 14 November 2021

காலண்டர் நகைச்சுவை

 நானும் புதுப்பொண்டாட்டி ஆச்சேன்னு, பொறுமையா போனா... ஓவரா அடாவடி பண்ணிட்டு திரியுறாண்ணா...

புதுசில்ல, அப்டிதா இருக்கும். வீட்ல மாசக் காலண்டர் இருக்கா ?

இருக்குண்ணே...

அந்தக் காலண்டர்ல, இன்னைலிருந்து ஒரு ஆறுமாசம் தள்ளி ஒரு தேதில கோடு போட்டு வெச்சுட்டு, பொறுமையா இரு...

ஆறுமாசத்துல மாறலேன்னா ?

இன்னுமொரு ஆறுமாசம் தள்ளி கோடுபோடு...

அப்பவும் மாறலேன்னா ?

இதென்னடா கேள்வி ? உடனே அந்த ராசியில்லாத காலண்டர கழட்டி வீசிட்டு, வேற கடையோட காலண்டர வாங்கிமாட்டு. இப்டியே வருசத்துல ரெண்டுவாட்டி பொறுமையா கோடுபோட்டு கொண்டு போனா... ஈஸியா டைம் பாஸாகும். ஒரேயடியா அம்பதறுவது வருஷத்துக்கு கோடு போடணும்னா... ரொம்ப கஷ்டமாத்தா இருக்கும். போய் சூதானமா பொழைச்சுக்க. போ...

ச்சை, என்னோட பொழப்பு இப்டி ஆயிப்போச்சுணே. உங்க வீட்ல பாருங்க, அந்தக்கா எவ்ளோ தன்மையா நடந்துக்கறாங்க...

ஒரு ரூமுக்கு ரெண்டு காலண்டர் மாட்டி வெச்சிருக்கண்டா. !!! 😞😞😞