Tuesday, 21 September 2021

பகை

ஏங்க.... பீச்ல இவ்ளோ நேரம் நல்லாதான பேசிட்டிருந்தீங்க...? இப்ப என்ன திடீர்னு நெர்வஸ்சா இருக்கீங்க...!?

பீச்ல அதோ அங்க தூரத்துல ஒக்காந்திருக்கிறது சைனாக் காரனும் அவன் பேமிலியும் தானே.,.!?

ஆமா... அப்படித்தான் தெரியுது....!?

அவன... கைமா பண்ண கை பரபரன்னு துடிக்குது...

ஹேய்... ஏன் இவ்ளோ டென்ஷனாரீங்க.. சாந்தமா ஒக்காருங்க...!?

இல்ல... விடு... அவங்கள ஒருவழி பண்ணிடுறேன்...

ஐய்யோ... தேச பக்தி இருக்க வேண்டியதுதான் அதுக்காக இப்படியா...!?
இது வேற பகைம்மா... தேச பக்திய இதோட மிங்கிள் பண்ணாத...!

பர்சனல் பகைக்கெல்லாம் அடிக்கப் போகாதீங்க...

இது பர்சனல் பகை இல்ல... பரம்பரைப் பகை எந்த சைனாக் காரன பாத்தாலும் என் நாடி நரம்பெல்லாம் துடிக்குது...

ஐய்யோ... பொண்ணு புள்ளைங்களோட வந்திருக்கான் அவங்கள தொட்டா பயங்கர அப்பன்ஸ் தெரியுமில்ல...

நா MGR படங்கள பாத்து வளர்ந்தவன்... கோடி ரூபா கொடுத்தாலும் பொண்ணு புள்ளைங்கள தொட மாட்டேன்... என்னோட டார்கெட் அந்த சைனா சப்ப மூக்கன் தான்... அவன அப்படியே குனிய வச்சி நடுமுதுகுல நங்கு நங்குன்னு குத்தனும் அப்புறம் அப்படியே தட்டாமலை சுத்தி வீசனும்... என்ன விடு...!
ஏங்க... டென்ஷன கொறைங்க... உங்கள நம்பி ஒரு குடும்பம் இருக்கு ஞாபகம் வச்சுக்குங்க... எம் மேல சத்தியம் நா சொல்றத கேப்பீங்களா மாட்டீங்களா...!?
சரி... கேக்குறேன்...

சரி... அப்படின்னா மொத ஷோல்டர எறக்குங்க...
எறக்கிட்டேன்...!
பாடிய வெறப்பா வைக்காம லூசா விடுங்க...!?
ம்ம்.. செஞ்சிட்டேன்...
இப்ப... அப்படியே கடலைப் பாருங்க... அங்க நிறைய குழந்தைங்க கடல்ல வெளையாடுறத பாருங்க....
ம்ம்...
இப்ப... டென்ஷன் குறைஞ்சிடுச்சா...
ஓரளவு...!
சரி... இப்ப கண்ண மூடி ஒன்னு ரெண்டு மூனு எண்ணுங்க...
எண்ணிட்டேன்....
இப்ப டென்ஷன் மொத்தமும் போயிடுச்சா....
போயிடுச்சி...
சரி... இப்ப சொல்லுங்க சைனாக் காரனுக்கும் உங்களுக்கும் என்ன பரம்பரை பகை...!?
' ரவை' யை கண்டுப் பிடிச்சதே இந்த சப்பை மூக்கனுங்க தானாம்.😃🤣😂.!

No comments:

Post a Comment